Monday, January 17, 2011

18/01/2011

http://manimalar.wordpress.com/2010/09/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/உணவுப் பழக்கங்களோ, தொழும்/பிரார்த்தனை/பூஜை செய்வதோ வீட்டுக்குள் இருந்து, அண்மை வீட்டுக்காரர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் இது ஒரு பிரச்னை ஆகாது. அதிகமாக புலால் உண்ணும் இனத்தினர், தமிழகத்திலே உள்ள போது, அல்லது குஜராத்திலே உள்ள போது பக்கத்து வீட்டினரை உத்தேசித்து, வீட்டில் மரக்கறியும் வெளியில் உணவு விடுதிகளில் மாமிசமும், மீனும் சாப்பிட்டு நான் பார்த்திருக்கிறேன்.
பெரிய குடும்பம்/வருகின்ற உறவினர் பெரிய குடும்பம் என்பது குடும்பக் கட்டுப்பாடு பற்றி பேச வைக்கிறது; சராசரி பிள்ளைப் பிறப்பு, அண்மையில் சென்சுஸ் படி கூட scheduled caste/tribe பிரிவினரை விட முஸ்லீம்களிடையே அதிகம் ; இது ஒரு பொருளாதாரப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டால், குடும்ப அளவு பிற மதத்தினர் இடையே உள்ளது போல் இரண்டுக்கும் மூன்றுக்கும் இடையே சராசரி இருக்கும்.
அன்பர் துவா போன்ற உருது பதங்களை சொல்லி இருக்கிறார்; உணவுக்கு முன் சிறிய பிரார்த்தனை கிறிச்துவர்களிடையும் உண்டு; சில இந்து வீடுகளிலும் (குறிப்பாக ராமகிருஷ்ணா மிஷன் முதலியோர்) பிரார்த்தனை இருக்கும்.
பொதுவில் உறவாடும் பொது , குழூஉக்குறி தவிர்த்து, பொதுவான மொழியையும் நடை, பாவனைகளையும் (உடை சொல்லவில்லை) கடைப் பிடித்தால் பிரிவினைகள் குறையும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கூடி வாழவேண்டும் என்ற எண்ணம் அடி மனதில் இருக்க வேண்டும். அது இந்துக்களுக்கு பிறவியில் இருந்து வருவது; / உலகெலாம் வாழ்க / சர்வே ஜனா சுகினோ பவந்து என்று சொன்னாலும், சொல்லாவிட்டாலும், அந்த மனப்பான்மை இருக்க வேண்டும். இந்தியா போன்ற பல மத, பல இன, பல மொழி நாட்டில் ஜிஹாத் என்ற பதம் ஒலிக்கக் கூடாது. அது வேற்றுமையை வளர்க்கும்..

No comments:

Post a Comment